மணிமேகலை-பிரியங்கா விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் பேசிய போட்டியாளர்கள்.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க..!
மணிமேகலை பிரியங்கா விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் பேசி உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை இருந்த நிலையில் அதில் போட்டியாளராக பிரியங்கா இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருந்தது. பலர் பிரியங்கா விற்கும் பலர் மணிமேகலைக்கும் ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஜெஃப்ரி,VJ விஷால் மற்றும் சாச்சனா மூவரும் நடந்த விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர். அதாவது உள்ள ஆயிரம் நடந்தாலும் வெளிய மக்களுக்கு நம்ம ஒரு நல்ல என்டர்டைன்மென்ட்டா இருக்கணும் ஆனா அப்படி பண்ணாம அர்ணவ் வெளியே போய் எப்படி பேசினா அதேதான் அங்கேயும் நடந்தது. அத அந்த ஷோக்குள்ளவே முடிச்சு இருக்கலாம் ஆனா அவங்க வெளிய வந்து பேசும்போது தான் இவ்வளவு பிரச்சனையா ஆயிடுச்சு ஆனா பிரியங்கா அக்கா அதை பத்தி எந்த பதிவும் பேசல ஆனா மணிமேகலை அது அவ்வளவு நேரம் பேசதுனால தான் பிரச்சனை பெருசாச்சு என்று விஷால் சொல்லுகிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.