விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு, அக்ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. நாயகியாக அனந்தா இணைந்துள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் இப்படத்தின் மையம். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, வேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
