விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேச்சு..

வருகிற 22-ந்தேதி விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதன் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசும்போது கண்ணீர் மல்க பேசினார் விஜய பிரபாகரன், ‘கேப்டன் பிரபாகரன்’ பட சமயத்தில் பிறந்ததால் எனக்கு பிரபாகரன் என்று பெயரிட்டதாக பலரும் கூறுவார்கள். எம்.பி.எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசிவரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம்.
அப்பா இறந்து ஒரு வருடமாகிவிட்டது இன்னும் அழுது கொண்டிருக்கிறான் என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். தோல்வியை நினைத்து அழவில்லை, என்னை சூழ்ச்சியில் தோற்கடித்து விட்டார்கள் என அழவில்லை. எங்கப்பாவை மிஸ் பண்றேன், அழுகிறேன்’ என்றார் விஜய பிரபாகரன்.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியானது ‘கேப்டன் பிரபாகரன்’ படம். இப்படம், விஜயகாந்துக்கு 100-வது படமாகும்.
