தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, விஜய் சேதுபதி விளக்கம்..

Web Ads

ரம்யா மோகன் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், விஜய் சேதுபதி, தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாகச் சுரண்டியதாகவும், அந்தப் பெண் இன்னும் வாழ்க்கையில் மீண்டு வர முயற்சி செய்து வருவதாகவும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பின்னர் நீக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு பெரும் செய்தியானதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மேலும், இந்தக் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தனது வழக்கறிஞர் இதை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க உள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Web Ad 2

கடந்த ஏழு ஆண்டுகளாக இதுபோன்ற பல அவதூறுகளை நான் சந்தித்துள்ளேன். என்னை இலக்காகக் கொண்ட இதுபோன்ற முயற்சிகள் எதுவும் இதுவரை என்னைப் பாதித்ததில்லை. அது ஒருபோதும் பாதிக்கவும் செய்யாது. தனது புதிய படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. என் புதிய படம் நன்றாக ஓடுகிறது. என்னைப் பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் படத்தை பாதிப்படைய செய்யலாம் என சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், அது நடக்காது.

இன்றைய காலகட்டத்தில், யார் வேண்டுமானாலும் யார் மீதும் எதையும் கூறலாம். அதற்கு ஒரு சமூக ஊடகக்கணக்கு மட்டும் போதும்’ என்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தலைவன் தலைவி’ படம் ‘ ஹிட்டாகி உள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

vijay sethupathi befitting reply to ramya mohan allegations
vijay sethupathi befitting reply to ramya mohan allegations