‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: சென்ஸார் எடுத்துள்ள முடிவு..

Web Ads

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பாக, பலரும் தெரிவிக்கும் பதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் என்பதாகவே இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த சென்சார் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்திற்கான சென்சார் வழக்கை ஜனநாயகன் படக்குழு வாபஸ் பெற முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், படத்தை சென்சார் குழு சொல்வதைப் போல மாற்றங்களை செய்யவும் தயாராக இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இது மட்டும் இல்லாமல் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவும் படக்குழு தயாராகி விட்டதாகவும். அதற்காக படக்குழு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தை ரிவைசிங் கமிட்டி பார்ப்பதற்கே இன்னும் நேரம் ஒதுக்கவில்லையாம். அதாவது படத்தை இந்த வார இறுதியான இன்றும் நாளையும் ரிவைசிங் கமிட்டி தரப்பில் பார்த்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர்களின் ரிவைசிங் பட்டியலிலேயே ஜன நாயகன் படம் இன்னும் இடம் பெறவில்லை. படத்தை இந்த தேதியில் தான் பார்க்க திட்டமிட்டுள்ளோம் என படக்குழுவினருக்கும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதனால் படக்குழு செம அப்செட்.

படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகளும் குறைந்திருக்கிறது. அதனால், விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த ‘தெறி’ ரீ ரிலீஸ் ஆகவுள்ளது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

vijay in jananayagan movie release case
vijay in jananayagan movie release case