விஜய்யின் தந்தை எஸ்ஏசி தனிக்கட்சி தொடங்குகிறார்; தவெக ரியாக்ஷன் என்ன?
எஸ்.ஏ.சந்திரசேகர் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்..
விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீஸாக இருக்கிறது.
இதற்கிடையே, விஜய் வளர்ச்சியில் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பும் தெரிந்ததே. இச்சூழலில், இருவருக்கும் அரசியல்ரீதியாக இடைவெளி ஏற்பட்டது. அதற்கு காரணமாக, தற்போது, தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் என சொல்வதுண்டு.
இருப்பினும், விஜய் தனது தாயையும் தந்தையையும் அடிக்கடி நேரில் சென்று சந்திப்பதும் நிகழ்ந்தது. மேலும் தவெகவின் முதல் மாநில மாநாட்டுக்கும் விஜய்யின் பெற்றோர் வந்திருந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஏ.சி தெரிவித்துள்ள தகவல் டிரெண்ட் ஆகி வருகிறது. அவர் கூறுகையில், ‘விஜய்யின் பெயரை வைத்து புஸ்ஸி ஆனந்த் சம்பாதிக்கிறார் என எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதனையடுத்து, விஜய்யை நான் எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை. என்னைவிட புஸ்ஸி ஆனந்த்தைதான் அதிகம் நம்புகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்களின் ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. நான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்’ என கூறியிருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், விஜய்யின் தந்தை தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?’ இதன் பின்னணி என்ன? மீண்டும் மகனுக்கும் தந்தைக்கும் முரண்பாடா? என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் விஜய், ‘அரசியல் சதுரங்கம் இன்னும் நிறைய வரும், மாறும், விலகும், இணையும் என்ற புரிதலில்; தான் எடுத்த முடிவில் உறுதியாய் நதிபோல ஓடிக் கொண்டிருக்கிறார்’ என்றே தோன்றுகிறது.