ஹீரோ-வில்லன் இருவருமே வலுவானவர்கள்: ‘சர்தார்’ கார்த்தி அப்டேட்
சர்தார்-2 படத்தின் அப்டேட்டாக, கார்த்தி தெரிவித்த தகவல் காண்போம்..
மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘சர்தார் 2’ உருவாகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் முதல் தோற்ற புரொமோ வீடியோ வெளியீட்டு விழாவும் நடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவ்வகையில், ‘சர்தார்-2’ படம் குறித்து கார்த்தி தெரிவிக்கையில்,
‘சர்தார்’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு கிராமத்து நாடக நடிகனை, பயிற்சி கொடுத்து ‘ஸ்பை’யாக்கி நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார்கள். உண்மையில் நடந்த சில விஷயங்களின் இன்ஸ்பிரேஷனில் இருந்து இயக்குனர் இந்த கதையை உருவாக்கி இருந்தார்.
பொதுநலனுக்காகப் போராடுகிற ஒரு கேரக்டர்தான் அது. அந்த கதாபாத்திரம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அப்படி வந்தால், என்ன நோக்கம் இருக்கும் என்று கேள்வி எழுந்தது.
உண்மையிலேயே இதில் ஒரு பெரிய விஷயத்தை இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஹீரோ – வில்லன் இரண்டு பேருமே வலுவானவர்களாக இருந்தால்தான் போர் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இந்தப் படம் மிகப்பெரிய போரைப் பற்றிப் பேசப்போகிறது.
அதில் ஒரு பகுதியாக எஸ்.ஜே.சூர்யா சார் இணைந்திருக்கிறார். படத்துக்காக நிறைய செலவு செய்து செட் அமைத்திருக்கிறார்கள். நிறைய உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்’ என்றார் கலகலப்பாக கார்த்தி.