வடிவேலு-பகத்பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?
ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது படம் பற்றிப் பார்ப்போம்..
மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்த ‘மாரீசன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதாவது, இப்படம் (தேதி குறிப்பிடாமல்) வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.
‘மாரீசன்’ படம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள மூவியாக இருக்கும். ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு கியாரன்டி என கூறப்படுகிறது. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார்.
முன்னதாக இப்படி இயக்குனர் சுதீஷ் சங்கர் தமிழில் ஆறுமனமே, திலீப் நடித்த மலையாளப் படம் வில்லாளி வீரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படம், பயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. யுவன் இசையமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸின் 98-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 100-வது படம் பெரிய அளவில் பேசப்படும் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஹீரோ-இயக்குனர் யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.!