Web Ads

ரஜினி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

Web Ad 2

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, ரஜினி பலரிடம் கதை கேட்டு வந்தார். கடைசியாக ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடித்திருந்த்து. இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை தற்போது ரஜினி தேர்வு செய்திருக்கின்றார்.

இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிடலாம் என்ற முடிவிற்கு ரஜினி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அன்று ‘ஜெயிலர்-2’ படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மட்டும் வெளியாகவிருந்தது. அந்நாளில் ‘தலைவர்-173 படத்தின் அறிவிப்பை வெளியிட்டால் ரசிகர்களின் கவனம் சிதறலாம் என்பதற்காக ஏதேனும் ஒரு அறிவிப்பை மட்டும் வெளியிடலாம் என ரஜினி முடிவெடுத்ததாக சொல்லப்பட்டது.

எனவே, ரஜினியின் பிறந்த நாளில் ‘ஜெயிலர்-2’ கிலிம்ப்ஸ் தான் ரிலீசாகும், ‘தலைவர் -173’ அறிவிப்பு வராது என உறுதியாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ரஜினி தனது முடிவை மாற்றியிருப்பதாக தெரிகின்றது. தனது பிறந்த நாளிலேயே இரண்டு பட அப்டேட்டையும் ரசிகர்களுக்கு வழங்கலாம் என்ற முடிவை ரஜினி எடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

அப்படியில்லை என்றால், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு நாள் முன்னதாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுவிட்டு, அடுத்த நாள் மற்றொரு அப்டேட்டை வெளியிடவும் வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால், கண்டிப்பாக ரஜினியின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு அவரது படம் தொடர்பான அப்டேட்ஸ் ட்ரீட் இருக்கும்.

thalaivar 173 directed by ramkumar balakrishnan announcement
thalaivar 173 directed by ramkumar balakrishnan announcement