நிலைமை மோசமாகி வருகிறது: தனுஷ் பட ஹீரோயின் கவலை..

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கிரித்தி சனோன். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது.
இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில்,
‘டெல்லியில் காற்று மாசுபாடு மோசமாகி வருகிறது. நான் ஒரு டெல்லிவாசி. கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியும், இப்போது அது மோசமாகி வருகிறது. இதைத் தடுக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையெனில், நாம் அருகருகே நின்றாலும், புகை மற்றும் தூசி காரணமாக ஒருவரையொருவர் பார்க்க முடியாது’ என்றார்.
முன்னதாக, காதல் பற்றிய கேள்விக்கு தனுஷ் தெரிவிக்கையில் ‘ அதிகப்படுத்தி சொல்லப்படும் உணர்ச்சி’ என்றார். இதற்கு கிரித்தி பதிலளிக்கையில்,’ அழுத்தமான ஆழமான உண்மையான அன்பு நிலைத்திருக்கும்’ என தெரிவித்திருந்தார்.

