Web Ads

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்..

சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது.

அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் ஆகக்கூடாது என்பதற்காக, அந்த படக்குழுவினருக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ‘சூர்யா 46’ மே மாதம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

குடும்ப சென்டிமென்ட் நிறைந்த பேமிலி டிராமாவாக ‘சூர்யா 46’ உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ‘கஜினி’ படத்தில் வந்த சஞ்சய் இராமசாமி போன்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகவும் வெங்கி அட்லுரி தெரிவித்திருக்கிறார்.

இதனால், அவரை ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஐரோப்பாவின் பெலாரஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஆன்மீகம் கலந்த கதையாக உருவாகியுள்ள ‘கருப்பு’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ படங்கள் பெரியளவில் வரவேற்பினை பெறாத நிலையில், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக சூர்யா மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பகத் பாசிலின் ‘ஆவேசம்’ படத்தை இயக்கி பெரும் வரவேற்பு பெற்றவர். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

suriya 46 directed by venky atluri movie release plan detail
suriya 46 directed by venky atluri movie release plan detail