ஓவர் ஃபில்டப் கூடவே கூடாது: கார்த்திக் சுப்புராஜிடம் நடிகர் சூர்யா கருத்து
அனுபவம் கற்றுத் தரும் பாடம் தான், அடுத்து நிகழ்வதை சரியாக்கும். இப்ப எதுக்கு இந்த கருத்துன்னா, நடிகர் சூர்யா பெற்ற அனுபவம் தான். வாங்க விஷயத்திற்கு போவோம்..
தமிழ்த்திரையில் முதல் முறையாக பான் இந்திய படமாக உருவானபடம் என்ற பெருமையை கங்குவா பெற்றது. எனவே தமிழ் சினிமாவிற்கே கங்குவா பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது தெரிந்ததே.
இப்படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், போகப் போக குறைய துவங்கிவிட்டது. அதற்கு இப்படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனம் மிக முக்கிய காரணமாக அமைந்தது.
கிட்டத்தட்ட இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவானது. மேலும் படத்தின் புரோமோஷனுக்காகவே படக்குழு பல கோடிகளை செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் இப்படத்தை புரோமோட் செய்தனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் இப்படத்தின் புரோமோஷன் நடைபெற்றது.
புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட படக்குழு பல விஷயங்களை சொல்லி, படத்தின் மீதான ஹைப்பை பலமடங்கு உயர்த்தினார்கள். தற்போது அதுவே ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
ரசிகர்கள் பலரும் கூட இதே கருத்தை தான் சொல்கின்றனர். படத்திற்கு எந்த வித ஹைப்பும் கொடுக்காமல் இருந்தாலே, இந்தளவிற்கு ட்ரோல் செய்யும் படமாக கங்குவா அமைந்திருக்காது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இதையே சூர்யாவும் உணர்ந்துள்ளார். ஓவர் ஹைப் படத்திற்கு செட்டாகாது என்பதை உணர்ந்த சூர்யா, தற்போது நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
‘சூர்யா 44’ படத்தில் இருக்கும் சில சஸ்பென்ஸ் விஷயங்கள் வெளியே கசியக்கூடாது என்றும், படத்தின் கதைக்களம் எதுவோ அதனை ட்ரைலரில் காண்பிக்க வேண்டும் என்றும்,
மிக முக்கியமாக படத்திற்கு ஓவர் ஹைப் கூடவே கூடாது என கூறியிருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. நல்ல அனுபவம் தான்.!