‘தலைவர்-173’ படம்: ரஜினிக்காக சுந்தர்.சி செய்த மாற்றம்..

Web Ads

ரஜினி, கமல், சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் ‘தலைவர்-173’ படம் குறித்துப் பார்ப்போம்..

சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கான ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. முன்னதாக, இப்படத்தை முடித்ததும் விஷால் நடிப்பில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இவர்களது காம்போவில் உருவான ‘மதகதராஜா’ பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், நான்காவது முறையாக இணைந்தனர். இந்நிலையில், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பினை எதிர்பாராது பெற்றார். இதனால், ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களுக்கான பணிகளையும் அவர் கவனிப்பார் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சுந்தர்.சி முதலில் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தனது படத்தை இயக்கும்போது, வேறு படத்தில் கவனம் செலுத்துவதை ரஜினி விரும்பமாட்டார் என்பதால், சுந்தர்.சி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஷால் நடிப்பில் அவர் இயக்கும் படம் தள்ளிப்போகும் என தெரிகிறது.

தற்போது ‘மகுடம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஷால். இதனையடுத்து அவரது 36-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாக விஷாலின் பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது அவர் ரஜினி படத்தில் பிசியாகி இருப்பதால், விஷாலுடைய அடுத்த படத்திற்கு வேறு இயக்குநர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தலைவர்173’ படத்தை சுந்தர்.சி தனக்கே உரிய ஜாலியான கலகலப்பான பாணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், எடுக்கப்படும் இந்த படத்தின் மூலமாக ரஜினியுடன் முதல் முறையாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தலைவர் 173’ தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

sundar c take new decision about rajini starrer thalaivar 173 movie
sundar c take new decision about rajini starrer thalaivar 173 movie