தேர்தலுக்கு பிறகு, விஜய் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளாரா?

ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்தது தெரிந்ததே.
இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு படங்களில் நடிப்பதற்காக விஜய் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாரா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில்,
‘விஜய்க்கு அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லை. அவரின் முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது. இது வெறும் வதந்தி’ என்றார். இருப்பினும், விஜய் ரசிகர்களுக்கு அவர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை 100 சதவீதம் உள்ளது. ஆனால், ஒரு சிலர் தேர்தலுக்குப் பிறகு விஜய் கண்டிப்பாக நடிப்பார். அதில், எந்த சந்தேகமும் இல்லை என சொல்லி வருகின்றனர்.
அதன் காரணமாக, விஜய் மீது சில விமர்சனங்களும் வந்தன. இந்த விமர்சனங்களை உண்டாக்கிய வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் விஜய்யின் முழு கவனமும் அரசியலில் தான் இருக்கின்றது என்றும், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகும் விஜய், தன் முடிவில் தொடர்ந்து நிலையாகவே இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், அரசியலில் நுழைந்தாலும் அவ்வப்போது தங்களுக்காக ஒரு சில படங்களில் நடிக்குமாறு தொடர்ந்து தளபதியின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுதான் வருகின்றனர். விஜய் படங்களை பார்த்து வளர்ந்த அவர்களால் தளபதி இனி படங்களில் நடிக்கமாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, தொடர்ந்து விஜய் எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறி வருகின்றனர். ஆனால், விஜய் தன் முடிவில் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது.

