Web Ads

ஜனநாயகன், பராசக்தி படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..

Web Ad 2

ஜனநாயகன், பராசக்தி இவ்விரு படங்களும் அரசியல் ரீதியான களம் கொண்ட கதைகள். இப்படங்களின் தற்போதைய அப்டேட்ஸ் பார்ப்போம்..

சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறுகளை மையமாக வைத்து ‘பராசக்தி’ என்ற படம் உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா.

சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன் டப்பிங் பேச ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ள நிலையில் ‘அலையே அலையே’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. ஷான் ரோல்டன், தீ இருவரும் இணைந்து அழகான காதல் பாடலாக பாடியுள்ளனர். சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா இருவருடைய டூயட்டாக இப்பாடல் உருவாகியுள்ளது. லிரிக்கல் வீடியோவில் விண்டேஜ் லுக்கில் இருவரும் இருந்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் இப்படத்தில் அதர்வா, ராணா, முக்கிய ரோலில் நடித்துள்ளனர். முன்னதாக சூர்யா நடிப்பில் ‘பராசக்தி’ உருவாகவிருந்த நிலையில், அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

‘பராசக்தி’ படத்திற்கு முன்பாக ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது விஜய்-வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. தெருக்குரல் அறிவு எழுதியிருந்த ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். தற்போது இப்பாடல் டிரெண்டிங்கில் தெறித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், திரைக்களத்தில் கலக்கப் போவது எந்தப் படம் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

sivakarthikeyan starring parasakthi movie dubbing work begins
sivakarthikeyan starring parasakthi movie dubbing work begins