3-வது முறையாக பிரபுதேவாவுடன் தனுஷ் கூட்டணி..

தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் படங்கள் தமிழிலும் வரவேற்பு பெற்றுள்ளது. அவ்வகையில் ‘தேரே இஷக் மெய்ன்’ படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில், தனுஷ் செம ஸ்டைலாக இருக்கிறார். இதுவரை ஏற்றிடாத புது ரோலில் தனுஷ் இப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
முன்னதாக வெளியான ‘ரவுடி பேபி’ பாடலும் ‘அடங்காத அசுரன்’ பாடலும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்த பாடல்கள். இதில், தனுஷின் நடனம் செம கலக்கல். அதற்கு முக்கிய காரணம் பிரபுதேவா மாஸ்டர். அவர்தான் இந்த இரண்டு பாடல்களுக்கும் நடன இயக்குநர்.
தற்போது, மீண்டும் மூன்றாவது முறையாக தனுஷ் மற்றும் பிரபு தேவா ‘தேரே இஷக் மெய்ன்’ படத்தில் இணைந்துள்ளனர். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் இம்மாத இறுதியில் திரையில் வெளியாகின்றது.
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குநராக இருந்துள்ளார். அப்பாடலில் தனுஷ் மற்றும் க்ரிதி சனோனின் நடனம் வேற லெவெலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது ‘மாரி-2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல்போல, ராயன் படத்தில் ‘அடங்காத அசுரன்’ பாடல்போல ஒரு பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
