மோகன்லால் நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறாரா?

Web Ads

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து யாரும் எதிர்பாராவிதமாக
விலகிவிட்டார் சுந்தர் சி. இந்தப் படம் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்தது. கதையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளே விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது.

‘முறைமாமன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான சுந்தர்.சி 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில், எந்த நடிகரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

Web Ad 2

இது தொடர்பாக சுந்தர்.சி தெரிவிக்கையில், ‘எனக்கு மோகன்லால் சாரை ரொம்ப பிடிக்கும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். பிற நடிகர்களை பார்த்தால் சகஜமாக பேசும் எனக்கு, மோகன்லால் சாரை பார்த்தால் மட்டும் வெட்கப்பட்டுக் கொண்டு பேசாமல் இருந்து விடுகிறேன். லால் சாரை பார்த்தால் எனக்கு பேச்சே வர மறுக்கிறது’ என தன் காதல் மனைவியான குஷ்புவிடம் கூறியிருக்கிறார் சுந்தர்.சி

ரஜினி படம் மிஸ் ஆகிவிட்டது. மோகன்லால் படமாவது கிடைக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள். மோகன்லால் அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடிக்கிறார். தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணையவுள்ளார் என் கூறப்படுகிறது. இச்சூழலில், சுந்தர்.சி விருப்பத்தை மோகன்லால் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

sundar c is waiting to direct a mohanlal movie
sundar c is waiting to direct a mohanlal movie