Web Ads

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. வைரலாகும் பதிவு.!!

பராசக்தி படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

Super information released about the film Parashakthi.. The post is going viral.!
Super information released about the film Parashakthi.. The post is going viral.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதர்வா,ஸ்ரீ லீலா, ரவிமோகன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா அவரது டப்பிங் பணியை தொடங்கி இருப்பதை வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.