மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா..

Web Ads

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். கேவிஎன் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர். இது விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இந்த இசை வெளியீட்டு விழாவை படக்குழு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது.

வழக்கமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்தன. முதல் முறையாக ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வரும் டிசம்பர் 27-ந்தேதி நடத்த படக்குழு அறிவித்துள்ளது.

Web Ad 2

மேலும், விஜய்யின் சினிமா பயணம் தொடர்பான ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

jananayagan movie audio launch in malaysia
jananayagan movie audio launch in malaysia