
குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. குவியும் லைக்ஸ்.!!
குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan celebrate pongal festival
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ்கே25 என்ற படத்தில் நடித்த வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் பொங்கல் திருநாள் ஆன இன்று குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்..அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
பொங்கலோ பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 😊🙏#HappyPongal #HappySankranti ❤️🤗 pic.twitter.com/B5VsSNsPoZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 14, 2025