
கணவருடன் பொங்கலை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்.. கியூட் போட்டோஸ் இதோ.!!
கணவருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

actress sakshi agarwal celebrate pongal
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழில் காலா,விசுவாசம், அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
சமீபத்தில் இவரது திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது கணவருடன் தல பொங்கலை சிறப்பாக பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார்.
கணவருடன் சேர்ந்து க்யூட்டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram