Web Ads

காணாமல் போன சத்யா, பதறிப்போன முத்து,மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா காணாமல் போக முத்துவும் மீனாவும் பதறிப் போய் உள்ளனர்.

SiragadikkaAasai Serial Today Episode Update 14-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 14-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூம் இல் இருக்க அவரது நண்பர் என்ன ப்ரோ கடை டல்லடிக்குது என்று சொல்லுகிறார். யாரும் வர மாட்டேங்கிறாங்க ப்ரோ நானும் எல்லா ஆஃபரும் போட்டு பாத்துட்டேன் யாரும் வர மாட்டேங்கிறாங்க என்று சொல்ல உன் வைஃப் வந்தால்தான் கூட்டம் வரும் என்று சொல்ல வழியில் எங்கேயாவது ரோகினியை பார்த்தீர்களா என்று கேட்கிறார். இல்ல ப்ரோ உங்க வைஃப் வந்ததுக்கு அப்புறம் தான் நீங்க லைஃப்ல முன்னேறி இருக்கீங்க அதுவரைக்கும் டம்மியா தான இருந்தீங்க என்று சொல்லுகிறார்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று மனோஜ் சொல்ல அந்த நேரம் பார்த்து ரோகினி கடைக்கு வர இரண்டு கஷ்டமர் வருகின்றனர் மனோஜ் கஸ்டமர் பார்த்து இப்ப என்ன ரோகினி இங்கயா இருக்கா கஸ்டமர் வந்துருக்காங்க என்று சொல்ல அவர் திரும்பி பார்த்தவுடன் ரோகிணி வருகிறார். அங்க பாருங்க ப்ரோ உங்க வைப் வராங்க அவங்க வந்த உடனே கஷ்டமர் வர ஆரம்பிச்சிட்டாங்க என்று சொல்ல ரோகினி வந்தவுடன் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல அவர் சென்று விடுகிறார். நீ இப்ப எதுக்கு இங்க வந்த என்று மனோஜ் கேட்ட அதற்கு ரோகிணி வீட்லயும் என்னிடம் பேச மாட்டேங்கற இங்கேயும் வரக்கூடாதுன்னு சொன்னா எப்படி மனோஜ் என்று சொல்ல,அம்மாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் என்று சொல்லுகிறார். அப்ப அம்மாவை பத்தி மட்டும் தான் யோசிப்பியா மனோஜ் என்ன பத்தி யோசிக்க மாட்டியா உனக்காக தான் எல்லாமே பண்ணி இருக்கேன் நான் சொன்ன ஒரு ஒரு பொய்யிலும் உனக்கு நல்லது தான் நடந்திருக்கு என்று சொல்லுகிறார். நான் உன்ன அவ்வளவு லவ் பண்ண அதனால தான் உன் கூட சேர்ந்து வாழணும் என்பதற்காக தான் இவ்வளவு பொய் சொன்னேன் ஏன்னா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் மனோஜ் என்று சொல்லுகிறார்.

ஆனால் மனோஜ் எதுவும் பேசாமல் இருப்பதால் ரோகினி இப்போ உன்னை தேடி வரும் போது நீ பேசாம இருக்கலாம் ஆனா என்னோட அருமை தெரிஞ்சது நீ பேசும் போது நீ என்கிட்ட பேச முடியாம போகலாம் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். உடனே அவரது நண்பர் உன் வைஃப் பேசுவது கேட்டுகிட்டு தான் இருக்கிறேன் நீ தான் முடிவு எடுக்கணும் ப்ரோ என்று சொல்ல மனோஜ் சரக்கடிக்க போகலாமா என்று கேட்கிறார் உடனே ஒரு வாட்டி வந்ததுக்கு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டு போய் விட்டுட்டு என்ன விடுடா சாமி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் முத்து வீட்டில் இருக்க மீனா காபி கொடுக்கிறார் எதுக்கு போன பாத்துட்டு இருக்கீங்க கண்ணுக்கு பிரச்சனை வரும் என்று சொல்லிக் கொண்டிருக்க எனக்கு வேலையை போன்ல தான் சவாரி வருதான்னு பார்த்து தான் ஆகணும் என்று சொல்ல, இன்னைக்கு சத்யாவுக்கு பரிச்ச அவன் நல்லா பாஸ் பண்ணி பெரிய ஆள் ஆகணும் என்று சொன்ன கண்டிப்பாக என்று முத்து சொல்லுகிறார் அதே மாதிரி சீதாவுக்கும் கல்யாணம் பண்ணனும் என்று சொல்ல மீனாவின் முகம் மாறுகிறது அதெல்லாம் எங்க அம்மா பார்த்துப்பாங்க என்று சொல்ல அப்ப நான் பாக்க கூடாதா என்று கேட்க நீங்க என் குடும்பத்து மேல இவ்வளவு பாசமா இருக்கிறது ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுகிறார் உன் குடும்பமா அப்ப என் குடும்பம் இல்லையா என்று பேசிவிட்டு மீனா மாமாவுக்கு காபி எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார் அந்த நேரம் பார்த்த சீதா போன் போட்டு சத்யா நைட்ல இருந்து வீட்டுக்கு வரலை என்று சொல்ல முதலில் எங்கேயாவது மேல இருப்பான் போய் பாரு என்று சொன்ன முத்து, சீதா எங்கேயுமே இல்ல இன்னைக்கு எக்ஸாம் வேற இருக்கு என்று சொல்ல உடனே முத்து அதிர்ச்சியாகிறார்.

உங்க அம்மா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க இல்ல மாமா என்று சொல்லுகிறார் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் உங்க அக்கா கிட்டயே சொல்லாத பயந்துருவாங்க எல்லாம் அந்த சிட்டியோட வேலையா தான் இருக்கும் என்று முடிவெடுத்து வீட்டிலிருந்து கிளம்ப மீனா அவசர அவசரமா எங்க போறீங்க என்று கேட்க ஒன்னும் இல்ல செல்வத்துக்கு ஏதோ வேலை வந்து இருக்கு அதனால போறேன் என்று செல்வத்துடன் சேர்ந்து சிட்டி ஆபீசுக்கு செல்கிறார். அங்கே மூடி இருப்பதால் முத்து சத்யா வேலை செய்யும் இடத்துக்கு போய் அங்கே கடைசியாக எப்போ ஆர்டர் எடுத்தான் என்பதை விசாரிக்க அவர்கள் அட்ரஸ் கொடுக்கின்றனர் அந்த அட்ரஸுக்கு வந்து பார்க்கும்போது சத்யாவின் பைக் கிடைக்கிறது.

அந்த பைக் நிற்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருக்கிறது உடனே முத்து அங்கே சென்று சிசிடிவி ஃபுட்டேஜ் கேட்கிறார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர் என்ன செய்வது என்று தெரியாமல் முத்து வெளியே வர மீனா அந்த இடத்திற்கு பூ கொடுக்க வருகிறார். முத்து மீனா விடும் உண்மையை சொல்கிறாரா? இல்லையா? மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பற்றி தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 14-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 14-04-25