சீதாவுக்காக பேசிய சத்யா, ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!
சீதாவுக்காக முத்து சத்யாவிடம் பேச, ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார்.

siragadikka asai serial today episode update 31-05-25
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா விஷயம் பற்றி கார் செட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் மீனா வருகிறார். உடனே மீனாவிடம் என்ன விஷயம் இங்க வந்து இருக்கா என்று கேட்க சத்யா தான் வர சொன்னான் என்று சொல்லிக் கொண்டிருக்க சத்யாவும் வந்து விடுகிறார். என்ன விஷயம் ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க என்று சொல்ல சத்தியா சீதா அருனிடம் மறந்து விடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டான் என்று சொல்ல முத்து நல்ல விஷயம் தானே என்று சொல்லுகிறார் இல்ல மாமா சீதா ரொம்ப கஷ்டப்பட்டு வளந்தா, அவ புத்திசாலியான பொண்ணுதான் தப்பான ஒருத்தர தேர்வு செய்யமாட்டா அந்த போலீஸ்காரர் நல்லவரா தான் இருப்பார் என்று சொல்லுகிறார்.
உடனே முத்து எனக்கு கிளாஸ் எடுக்குறியா என்று கோபப்பட இல்ல மாமா சீதா அழுதுகிட்டே இருக்கா பாக்க முடியல கஷ்டமா இருக்கு என்று சொல்ல எனக்கு சீதா வாழ்க்கை நல்லா அமையுன்னு தான் ஆசை சின்ன வயசுல இருந்து எனக்கு எந்த சந்தோஷமும் கிடைச்சது கிடையாது எங்க அப்பா தான் என் மேல பாசம் காட்டுவாரு எங்க அம்மா பாசம் எனக்கு கிடைக்கல என் மனசுல அவ்வளவு வருத்தம் இருக்கு தெரியுமா என்றெல்லாம் பேசிவிட்டு கொஞ்ச நேரத்தில் முத்துவிற்கு ஃபோன் வர சவாரிக்கும் கிளம்பி விடுகிறார் என்ன அக்கா மாமா இப்படி பேசுறாரு என்று சொல்ல அவர் தப்பா புரிஞ்சுகிட்டு பேசிகிட்டு இருக்காரு பாத்துக்கலாம் என்று சொல்லுகின்றனர்.
மறுபக்கம் சுருதி ரவியிடம் ரெஸ்டாரன்ட் பற்றி பேச இப்போதைக்கு வேணா ஸ்ருதி என்று சொல்லுகிறார் இப்பத்திக்கு வேணாமா இல்ல ரெஸ்டாரண்டை திறக்க வேணாமா என்று கேட்க அகல கால் வைக்க கூடாது ஸ்ருதி யோசித்து கவனமாக செய்யணும் என்று சொல்ல உன்னோட ஒய்ஃப் ஓனரா இருக்குறதால உனக்கு ஈகோ இருக்கா என்று சொல்ல நான் அப்படிப்பட்ட ஆளா என்று கேட்கிறார் அப்புறம் என்ன என்று சொல்ல அதெல்லாம் யோசிச்சு தான் ஸ்ருதி பண்ணனும் என்று சொல்லுகிறார். ரவி ரெஸ்டாரன்ட் பற்றி எதுவும் பேசாமல் இருப்பதால் ஸ்ருதி நான் சாப்பிட வரலை என்று சொல்ல முதல்ல சாப்பிடவா அதுக்கப்புறம் ரெஸ்டாரன்ட் பத்தி பாத்துக்கலாம் என்று சொல்லி சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார் மறுநாள் காலையில் முத்துவிற்கு மீனா சாப்பாடு கொடுத்து கொண்டு இருக்க மதியம் சாப்பிட வருவீங்களா என்று கேட்கிறார் இல்ல மீனா புரோக்கர் ஒருத்தர் சொல்லி இருக்காரு அப்படியே போலான்னு இருக்கேன் என்று சொல்ல முதல்ல சீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா நிறுத்துங்கள் என்று சொல்லுகிறார். ஏ சீதாவுக்கு கல்யாணம் பண்ணி தான ஆகணும் என்று முத்து கேட்கிறார். அது ஏன் அவளுக்கு மனசுக்கு பிடிச்சவளா இருக்க கூடாது என்று மீனா பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரவி வருகிறார்..
சாப்பிடுங்க ரவி என்று சொல்ல இல்ல அண்ணி சுருதி வரட்டும் குளிச்சிட்டு இருக்கா என்று சொல்லிவிட்டு உட்கார என்னடா சோகமா இருக்கேன் என்ற முத்து கேட்க எங்கடா நைட்டெல்லாம் தூக்கமே இல்லை சுருதி ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்றத பத்தி பேசிக்கிட்டே இருக்கா என்று சொல்ல மீனா உங்களுக்கு நல்லது பண்ணனும்னு தானே நினைக்கிறாங்க என்று சொல்ல அதற்கு ரவி உனக்கு அண்ணி கார் வாங்கி கொடுத்தாங்க ஆனா அது அவங்க சம்பாதிச்சு வாங்கி கொடுத்தாங்க இதே அவங்க அம்மா வீட்டில் இருந்து வாங்கி கொடுத்து இருந்தா நீ வாங்கி இருப்பியா எனக்கு அப்படித்தானே என்று சொல்லி முத்து அதுவும் சரிதான் என்று சொல்லுகிறார் நான் உனக்காக பல குரல் கிட்ட பேசுறேன் என்று சொல்ல பிறகு ரவிக்கு போன் வந்து விடுவதால் சென்று விடுகிறார்.
மறுபக்கம் முத்து மீனா விடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு மீனாவின் பதில் என்ன? மனோஜ் வெறுப்பேத்த ரோகினி என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 31-05-25