மனோஜ்க்கு கட்டளையிட்ட விஜயா, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா மனோஜ்க்கு கட்டளையிட, ரோகிணி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் ஹாலில் இருக்க ஸ்ருதி ரோகிணியை கூப்பிடுகிறார் உடனே மனோஜ் எதற்கு என்று கேட்க நீங்க ஒன்னும் ரோகினி இல்லையே என்று சொல்ல பல்பு வாங்குகிறார். பிறகு ரோகினி வந்தவுடன் ஸ்ருதி தெரிஞ்சவங்க கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்திருக்கு என்று சொல்ல விஜயா உங்க சொந்தக்காரர் கல்யாணத்துக்கு இவர எதுக்கு போகணும் என்று கேட்க சாத்துக்கொடி பை போட என்று சொல்லி விஜயாவின் வாயை அடக்குகிறார்.
அதற்கு முத்து சூப்பர் பார்லர் அம்மா வந்த வேகத்தில் இரண்டு விக்கெட் அவுட் என்று கிண்டல் அடிக்க பிறகு சுருதி ரோகிணி இடம் விஷயத்தை சொல்ல ரோகினி விஜயாவை பார்க்கிறார் நீங்க எதுக்கு ஆண்ட்டி பாக்குறீங்க என்று கேட்க ஆன்ட்டி சொன்னா நான் போறேன் என சொல்லுகிறார். அண்ணாமலை அப்போ இத்தனை நாள் வெளியே எங்கேயுமே போகலையா நீ வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கியா விஜயா என்று கேட்க விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் மீனாவிடம் கேட்க ஆமாம் மாமா அவங்க எங்கேயுமே வெளியே போறது இல்ல என்று சொல்லிவிடுகிறார் உடனே விஜயா மீனாவை முறைக்க அம்மா தான் சொல்லிட்டு போனாங்களே மூணு மருமகளையும் ஒரே மாதிரி பாருங்க அப்புறம் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்ல, அதற்கு விஜயா நான் என்னோட பையனோட கடைக்கு தான் போவேன் நானும் சொன்னேன் அவ எங்க வேணா போகட்டும் என்று சொல்லுகிறார்.
மனோஜ் ஓட பொண்டாட்டி தானே ரோகிணி அது எப்படி நீ போக முடியாதுன்னு சொல்ல முடியும் என்று சொல்ல விஜயா கண்டிஷன் ஆக மனோஜிடம் ஆக கடைக்கு வரக்கூடாது. மனோஜ் எல்லாத்தையும் பார்த்துப்பான் என்று சொல்லிவிட்டு மனோஜிடம் வந்து இனிமே அவ உன் கடைப்பக்கம் வரக்கூடாது அப்படி வந்தா நான் நீ என் அம்மானு கூப்பிடக்கூடாது என்று சொல்ல மனோஜ் துளி கூட யோசிக்காமல் சரிமா என்று சொல்லிவிட ரோகினி அதிர்ச்சி அடைகிறார். பாருப்பா எப்படி பேசுறான் என்று சொல்லிமுத்து சொல்ல ரோகிணி எங்கள் விஷயத்துல தலையிடாதீங்க முத்து என்று சொல்லுகிறார். நான் ஆன்ட்டி சொல்றது தான் கேட்பேன் அவங்க போக சொன்னா தான் போவேன் என்று சொல்ல சுருதி வேலைக்கு போறது நம்மளோட விருப்பம் அது வந்து மத்தவங்க செய்யக்கூடாது என்று சொல்ல மீனாவும் அதையே சொல்லுகிறார் ஆனால் ரோகினி அது உங்களோட விருப்பம் என்னோட விருப்பம் ஆன்டி பேச்ச தான் நான் கேட்பேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் சீதா அருண் வீட்டிற்கு மாத்திரை எடுத்துக் கொண்டு வர அருண் அம்மா வரவேற்று உட்கார வைக்கிறார் அருண் வந்து பேசிக்கொண்டிருக்க அம்மா காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். உடனே ரூமுக்கு வந்த அருண் பின்னாலேயே அவர்கள் அம்மாவும் வர என்னடா போய் கல்யாண விஷயத்தை பேசட்டுமா என்று கேட்கிறார் அதுக்கு தான் உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன் அவ ஏதாவது தப்பா நினைச்சுப்பா அவளே சொல்றேன் சொல்லி இருக்கா ஆனால் அமைதியாக இரு என்று சொல்ல எனக்கும் இந்த பொண்ணு மருமகளா வரணும்னு ரொம்ப ஆசை இருக்கு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா பார்த்த முதல் வாட்டி எனக்கு தோணுச்சு என்று சொல்லிக்கொண்டு எதுவும் தெரியாத இது மாதிரி பேசிக்கிட்டு இரு அப்புறம் பாத்துக்கலாம் ஏற்கனவே அவ எனக்கு டெஸ்ட் வைக்கிறேன் வர சொல்லி இருக்கா என்று சொல்ல இப்பவே நல்லா பயப்படுறியே இது மாதிரி ஆள் தாண்டா உனக்கு கரெக்ட்டா இருக்கும் என்று சொல்லிவிட்டு வரஅருண் சீதாவை பைக்கில் உட்கார வைத்து கூட்டி வருகிறார்.
பைக்கில் வரும்போது இருவரும் பேசிக் கொண்டு வர அந்த நேரம் பார்த்து மீனா கவனித்து விடுகிறார் என்ன சீதா மாதிரி இருக்கு என்று பார்க்க ஆமா சீதா தான் இவை யார் கூட போய்கிட்டு இருக்கா என்று யோசிக்கிறார் மறுபக்கம் முருகனுக்கு லவ் சக்ஸஸ் ஆனதால் முத்து மற்றும் செல்வத்திற்கு ட்ரீட் கொடுக்கிறார் அப்போது முத்து உடனே கல்யாணம் தானே என்று கேட்க இல்லன்னு ஒரு சின்ன வீடு வாங்கணும் அப்பதான் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வைபை கூட்டிட்டு போய் தங்க முடியும் இப்ப நான் அண்ணன் வீட்ல இருக்கேன் அதனால இதெல்லாம் பண்ணி ரெடி பண்ணிட்டு தான் கல்யாணம் என்று சொல்ல முத்து சூப்பர் ரா தெளிவா யோசிக்கிற நானே ரூம் இல்லாம என் பொண்டாட்டியும் நானும் இப்ப கஷ்டப்பட்டு காசு சேத்துக்கிட்டு இருக்கோம் ரூம் கட்டறதுக்கு என்று சொல்லி பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். சீதா என்ன டிராப் பண்றதுனால உங்களுக்கு தான் லேட் ஆகுது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். முத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் கடைக்கு பக்கத்தில் சீதாவை அருண் டிராப் செய்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும் முத்து பார்க்கிறார். சீதாவை முத்து பார்த்து விடுகிறாரா? இல்லையா? என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
