நந்தினி மீது விழுந்த திருட்டுப்பழி, சுந்தரவல்லி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க சுந்தரவல்லி ஆபீசுக்கு கிளம்புகிறார் அருணாச்சலம் இவ்வளவு சீக்கிரம் எதுக்கு என்று கேட்டு பேசி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இன்கம்டேக்ஸ் ஆஃபீஸர்ஸ் வந்து உங்க வீட்டில் கணக்கு காட்டாத பணத்தை பதிக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருப்பதாக லெட்டர் கொடுக்கிறார். ஆனால் சுந்தரவல்லி எங்களுக்கு வர ஒரு ஒரு ரூபாயும் கணக்கு இருக்கு நான் டேக்ஸ் கட்டி இருக்கேன் உங்களுக்கு யார் சொன்னது என்று கேள்வி கேக்க, அருணாச்சலமும் திடீர்னு இப்படி வந்தா எப்படி நானும் எங்களோட லாயரை கன்சல் பண்ண வேண்டாமா என்று கேட்கிறார்.
இன்கம்டேக்ஸ்னா திடீர்னு தான் வர முடியும் சோதனை பண்ணிட்டு எதுவும் கிடைக்கலன்னா போயிட போறோம் அவ்வளவு தானே உங்க வீட்டில யார் யார் இருக்காங்க கூப்பிடுங்க என்று சொல்லி சொல்லுகின்றனர். அருணாச்சலம் குடும்பத்தினர் அனைவரையும் கூப்பிட அவர்களிடமிருந்து போனை வாங்குகின்றனர். இப்போ நாங்க வீட்ல செக் பண்ணுவோம் தேவையில்லாம வெளியே யார்கிட்டயாவது சொன்னீங்கன்னா கம்ப்ளைன்ட் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டில் தேட ஆரம்பிக்கின்றனர். அருணாச்சலம் போலீஸ் இடம் சூர்யாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சாகணும் என்று போன குடுங்க நான் ஸ்பீக்கர்ல கூட போறேன் என்று சொல்லி கேட்க போலீசும் போனை கொடுக்க மறுக்கிறார்
மறுபக்கம் சூர்யாவும் விக்ரமும் மாறி மாறி குடித்துவிட்டு ஃபுல் போதையில் இருக்கின்றனர். சுரேகா மாதவியிடம் இத்தனை வருஷம் இல்லாம என்னக்கா புதுசா இருக்கு என்று கேட்கிறார். அதுதான் எனக்கே ஒன்னும் புரியல என்று மாதவி சொல்ல, அந்த நேரம் பார்த்து போலீசுக்கு போன் வர அவர் வெளியில் போய் பேசுகிறார் உடனே நந்தினி அருணாச்சலத்திடம் அங்க போலீஸ் வரத்து காட்டியும் நம்ம சூர்யா சாருக்கு விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்ல அதுதான் போன் இல்லையேமா என்று சொல்லுகிறார் என்கிட்ட இருக்குது ஐயா என்று சொல்லி போனை கொடுக்க அருணாச்சலமும் சூர்யாவுக்கு போன் போட சூர்யாவும் போனை எடுக்கிறார் அவரிடம் விஷயத்தை சொல்லி பேசிக்கொண்டிருக்க, சூர்யா நான் தான் கரெக்டா கட்டுறேன் டாடி என்று சொல்வதற்குள் ஆபிஸர்ஸ் வந்து போனை வாங்கி விடுகின்றனர்.
யார்கிட்டயும் பேச கூடாதுன்னு சொல்லியும் போன் பண்ணி இருக்கீங்க இதுக்கே உங்க மேல தனியா கேஸ் பைல் பண்ண வேண்டியதா இருக்கும் என்று சொல்கிறார். பிறகு சூர்யா குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் போட எல்லாருடைய போனும் சுவிட்ச் ஆஃப் ஆக இருக்க உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப சூர்யாவால் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடுகிறார். மாதவி தண்ணி கூட குடிக்க போகக் கூடாது என்று சொல்ல நாங்க ஒரு ஆள் கூட அனுப்புவோம் என்று சொல்லி அனுப்புகின்றனர். ரைடு நடந்து கொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து கிட்டு இருக்க முடியும் என்று கேட்க தேவைப்பட்டால் உங்க இண்டஸ்ட்ரிலையும் ரைடு நடந்தாலும் நடக்கும் என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்பட்டு இது நாளைக்கு நியூஸ்ல வந்தா எங்க மரியாதை போயிடும் இதை அனுமதிக்க முடியாது என்று சுந்தரவல்லி கோபப்பட அதுக்கு உங்களோட அனுமதி தேவையில்லை என்று சொல்லுகிறார்.
சூர்யா டென்ஷனாக எதுக்கு இப்போ இந்த ரைடு என்று பேசிக் கொண்டே வர விக்ரம் பார்த்து ஓட்டு மச்சான் ரெண்டு பேருமே ஃபுல் போதையில் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்க நான் தெளிவா தான் இருக்கேன் என்று சூர்யா சொல்லுகிறார். உடனே சூர்யா அருணாச்சலத்திற்கு போன் போட, ஏற்கனவே குடிச்சுட்டு வண்டி ஓட்டும் இதுல போனும் பார்க்காத என்று சொல்லுகிறார். விக்ரம் நான் வேணும்னா விஜிக்கு போன் போடவா என்று சொல்ல சூர்யா வேண்டாம் அங்கு யார் போனாலும் கேஸ் ஃபைல் பண்ணிடுவாங்க என்று சொல்லுகிறார். வரும் வழியில் போலீஸ் சூர்யாவின் காரை ஓரம் கட்டி கண்ணாடியை இறக்கச் சொல்ல சூர்யா மீது சரக்கு வாசனை வர இரண்டு பேரும் புல்லா குடிச்சிருக்காங்க என்று சொல்லுகிறார் அவங்கள இறங்கி வர சொல்லுங்க என்று சொல்ல இருவரும் இறங்கி வருகின்றனர். உயர் அதிகாரிகளிடம் வந்த சூர்யா, நீங்க பைன் எவ்வளவு வேணா போட்டுக்கோங்க நான் கொடுத்துடறேன் ஆனா ஒரு எமர்ஜென்சி வீட்ல பிரச்சனை நான் போய் ஆக வேண்டும் நீங்க கொஞ்சம் பர்மிஷன் கொடுங்க என்று சொல்ல, ஏன் போதையில் கார் ஓட்டி யார் மேலயாவது மோதவா என்று கேட்கிறார்.
உடனே விக்ரம் பாக்கெட்டில் இருந்து காசு எடுத்து இது லஞ்சமா எடுத்துக்காம கிப்ட்டா வச்சுக்கோங்க என்று போலீஸிடம் கொடுக்க, அவர் கோபப்படுகிறார். உடனே வாயில் வைத்து ஊத சொல்ல முதலில் விக்ரம் ஊத என்னைய முரட்டுக்குடி குடியா இருக்கு என்று சொல்ல சூர்யாவிடம் ஊத சொல்ல மெஷினை வெடிச்சிடும் போல இருக்கு என்று சொல்லி இருவர் மீதும் கேஸ் போட சொல்லுகின்றன. உடனே சூர்யாவிடம் விக்ரம் இப்ப என்ன பண்றது என்று கேட்க இன்னைக்கு நேரமே சரியில்லை என்று சூர்யா சொல்ல அந்த இடத்தில் அர்ச்சனா வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ரேணுகா மேலே இருந்து பூத்தொட்டி ஒன்றை தட்டி விட அது கீழே வந்து விழுகிறது அதில் கவரில் நகைகள் இருப்பதை அனைவரும் பார்க்க சுரேகா எவ்வளவு கிரிமினலா யோசிச்சி இருக்கா பாருங்க என்று சொல்லுகிறார். உடனே நந்தினி நான் கும்பிடற கருப்பசாமி மேல சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லுகிறார்
சுந்தர வள்ளி அருணாச்சலத்தை பார்த்து இவ்வளவு நாளா திருடிக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கமே உங்களுக்கு உடம்பு கூசல என்று கேட்க அருணாச்சலம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். சூர்யா அர்ச்சனாவுடன் வந்து இறங்க சுரேகா நந்தினியை வெளியில் இழுத்து வருகிறார். சூர்யா அவ அப்படி எல்லாம் பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல சுந்தரவல்லி வாய்ப்பிருக்கு என்று சொல்லுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
