கோலாகலமாக நடந்துள்ள நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பு.. குடும்பத்துடன் சீர் கொண்டு வந்த ரோபோ சங்கர்.. வீடியோ இதோ..!

நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பிற்கு ரோபோ சங்கர் குடும்பத்துடன் சீர் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

Vijay TV Fame KPY Nanjil Vijayan wife's baby shower
Vijay TV Fame KPY Nanjil Vijayan wife’s baby shower

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த இவர் தற்போது மனைவிக்கு கோலாகலமாக வளைவு காப்பு நிகழ்ச்சியை நடத்திய உள்ளார்.

அதில் ரோபோ ஷங்கர் குடும்பத்தினருடன் சென்று நாஞ்சில் விஜயன் மனைவிக்கு சீர் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.