சிம்புவும் அஷ்வத் மாரிமுத்துவும் இணையும் படம் எப்போது?
மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் சிம்பு தனக்கு கிடைத்த ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் எனவும், இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில், மிகப் பெரிய வெற்றி பெற்று ரஜினியின் பாராட்டும் பெற்ற படம் டிராகன். இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அது சிம்புவின் 51-வது படமாக தயாராக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால், தற்போது சிம்புவின் திரைப் பயணத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் துவங்குமா? இல்லை மாற்றங்கள் ஏதேனும் நடக்குமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தற்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பதிலளித்திருக்கிறார்.
அவர் STR 51 பற்றி பேசுகையில், ‘ரசிகர்கள் அவசரப்பட வேண்டாம், படம் சொன்னபடி அடுத்த வருடம் கண்டிப்பாக வரும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என தெளிவுபடுத்தியுள்ளார்.
