விஜய்யை சீண்டிய சத்யராஜின் மகள்: ரசிகர்கள் பதிலடி வைரலாகிறது
விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து ‘லியோ’ படத்திலிருந்தே வதந்திகள் தொடர்கிறது.
இருவரும் தனி விமானத்தில் சென்றது, லிஃப்ட்டில் இரண்டு பேரும் இருந்த ஃபோட்டோ, ஒரே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள் என பலரும் பலவிதமாய் பேசுகிறார்கள்.
அதுமட்டுமின்றி விஜய்யும், திரிஷாவும் நெருக்கமாக இருப்பதால்தான் விஜய்யின் மனைவி சங்கீதா கோபித்துக்கொண்டு லண்டன் கிளம்பிவிட்டார் எனவும் கொளுத்திப் போட்டனர்.
விஜய்யின் அரசியல் களத்தை சிதைப்பதற்காக, அவர் மீது பெண் பித்தர் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதையெல்லாம் விஜய் தவிடு பொடியாக்கி விடுவார் என்று தவெக தொண்டர்கள் இணையவெளியில் தொடர்ந்து உறுதியோடு கூறி வருகின்றனர்
இச்சூழலில் சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, விஜய்க்கு சரமாரியாக கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘விஜய் இன்னமும் மக்கள் பணி செய்யவே ஆரம்பிக்கவில்லை. அவரது கட்சி 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த விதமான போட்டியையும் திமுகவுக்கு கொடுக்காது.
ஒரு சினிமா துறையை சேர்ந்தவளாக இப்போது பேசுகிறேன். விஜய் இதுவரை தனது படங்களில் எந்தத் தமிழ் நடிகையை நடிக்க வைத்திருக்கிறார். ப்ரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, வாணி போஜன் போன்ற தமிழ் நடிகைகள் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்.
அவர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கலாமே. அதை விட்டுவிட்டு விஜய் அண்ணா எப்போதும் தன்னுடைய படங்களில் வட மாநில ஹீரோயின்களைத்தான் நடிக்க வைப்பார்.
விஜய் அண்ணா உங்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் நடிகைகளில் திரிஷாவை தவிர வேறு யார் அண்ணா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, விஜய் ரசிகர்கள் ‘சும்மா பரபரப்புக்காக “விஜய் அண்ணானு” இப்படியெல்லாம்.. திருவாய் மலரக்கூடாது. இதற்கு தங்களது ‘டாடி’ யிடமே லூட்டியான பதில் இருக்கு, கேளுங்கோ அம்மணி’ என கருத்து தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.