‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது எப்படி?: பூஜா ஹெக்டே பதில்
‘ரெட்ரோ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது பற்றி பூஜா கூறிய பதிவை காண்போம்..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார்.
மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் வாயிலாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டே தற்போது பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபாஸ் ஜோடியாக நடித்த ‘ராதே ஷியாம்’ படத்தில் குறிப்பிட்ட எமோஷனலான காட்சியில் தனது நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆகி ‘ரெட்ரோ’ பட வாய்ப்பை கார்த்திக் சுப்பராஜ் வழங்கியதாக பூஜா தெரிவித்துள்ளார்.
‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவில் இல்லாவிட்டாலும், அப்படத்தின் வாயிலாக ‘ரெட்ரோ’ பட வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார். காதலும், ஆக்சனும் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்பட ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தற்போது விஜய்யின் ஜோடியாக ‘ஜன நாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.