ரஜினி நடிக்கும் கூலி படம்; சென்னையில் விறுவிறு படப்பிடிப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் அப்டேட் குறித்துப் பார்ப்போம்..
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில காட்சிகள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால், பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது, அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஆதித்யராம் ஸ்டுடியோவில் ஒரு பிரம்மாண்ட மேன்ஷன் செட் அமைக்கப்பட்டு, ரஜினி மற்றும் உபேந்திரா பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம், ஜெயிலர். இப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
அதேபோல், லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம் ரூ.612 கோடி வசூலும், நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலையும் எட்டியது. இந்நிலையில் ’கூலி’ படத்திலும் வசூல் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.
நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்னும் கதாபாத்திரத்திலும், முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா, காளீஸா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். குறிப்பாக, ரஜினிகாந்துக்கு தேவா என்னும் கதாபாத்திரப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேவா என்பது தளபதி படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ ரூ.1000 கோடி கலெக்ஷனுக்கு வெச்ச குறி வெற்றியானால் மகிழ்ச்சிதான்.!