எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?

Web Ads

தமிழ் சினிமாவில், ‘பருத்தி வீரன்’ படத்தில் செம கலக்கலாக அறிமுகமாகி, தற்போதும் தனித்த முத்திரை பதித்து வருபவர் நடிகர் கார்த்தி.

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெய்யழகன்’ பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் உன்னத படைப்பாக மெய்யான அழகன் இருந்தது. இப்படம் ஓடிடியிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘மெய்யழகன்’ வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில், கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவை ஜார்ஜ்.சி. வில்லியம்ஸ் கவனிக்கிறார்.

இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே பொங்கல் ரேஸில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், ஷங்கரின் பிரம்மாண்ட படமான கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் போட்டி போட்டு களமிறங்கி உள்ளன.

இதனால், பொங்கல் பண்டிகைக்கு ‘வா வாத்தியார்’ படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தை படக்குழு கைவிட்டுள்ளது. அதற்கு பதிலாக, பொங்கல் முடிந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விடுமுறையில் வா வாத்தியார் படத்தை சிங்கிளாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடைசியாக தயாரித்த கங்குவா படம் தோல்வியை சந்தித்துள்ளதால், வா வாத்தியார் படத்தின் மூலம் அவர் எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சூர்யா நடித்து ஞானவேல் ராஜா தயாரித்த கங்குவா படம், வேட்டையனுக்காக வெளிவராமல், பின்னர் சோலோவாக வந்ததும் நினைவுகூரத்தக்கது.

karthi starrer vaa vaathiyaar movie release date leaked
karthi starrer vaa vaathiyaar movie release date leaked