Pushpa 2

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. வைரலாகும் பதிவு..!

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

soodhu kavvum 2 movie release date update
soodhu kavvum 2 movie release date update

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

இந்த படம் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் இயக்கத்திலும் தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டைமண்ட் தயாரிக்கிறது. மேலும் ராதாரவி,ரமேஷ் திலக் ,எம். எஸ் பாஸ்கர், கருணாகரன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தின் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பதிவு இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.