புஷ்பா 2 பட நடிகர்களின் சம்பளப் பட்டியல்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்..
புஷ்பா படம் செம ஹிட்டாகி, நல்ல கலெக்ஷனும் ஆன நிலையில், இரண்டாம் உருவாகி வெளிவர இருக்கிறது. இவ்வகையில், இப்பட நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்து காண்போம்..
நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ட்ரைலர் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், புஷ்பா படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. புஷ்பா 2 நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் உறுப்பினர் அல்லு அர்ஜுன் என்பதில் சந்தேகமில்லை.
இப்படம் ஏற்கனவே ரூ.500 கோடி பட்ஜெட்டுக்கு எதிராக ரிலீஸுக்கு முந்தைய வியாபாரத்தில் ரூ.1085 கோடிகளை வசூலித்துள்ளது.
பிரேக்ஈவன் இலக்கு உலகளவில் ரூ.1200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் தனது சம்பளமாக ரூ.300 கோடியை பாக்கெட் செய்து, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகையானது, தளபதி 69 படத்திற்காக நடிகர் விஜய் சம்பாதித்த ரூ.275 கோடிகளைத் தாண்டி அமைந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார் நடிகர் அல்லு அர்ஜுன்.
புஷ்பா படத்தில் மிரட்டிய முக்கிய கேரக்டரான பகத் பாசில், முதல் பாகத்துக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பெற்றார். தற்போது புஷ்பா 2விற்கு சம்பள உயர்வைப் பெற உள்ளார். அதாவது, அவரது சம்பளம் ரூ.8 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுகுமார் ரூ.15 கோடியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ரூ.5 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
இந்த சம்பளப் பட்டியலை பார்த்த நெட்டிசன்கள், ‘கங்குவா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ரூ 5 கோடியா, இருந்தாலும் தயாரிப்புக்கு ரெம்ப தாராள மனசு தான்’ என கமெண்ட்ஸ் செய்வது வைரலாகி வருகிறது.