சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தில் நிவின் பாலியும் இணைந்தார்
சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில், சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானுக்கு பதிலாக நிவின் பாலியும் இணைந்துள்ளனர். இது குறித்த விவரம் பார்ப்போம்..
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச்சிறப்பாக பங்கேற்றனர். இதில் சிவகார்த்திகேயனும் பங்கேற்ற நிலையில், அவர் தன்னுடைய முந்தைய படங்கள், குடும்ப வாழ்க்கை அடுத்தடுத்த படங்கள், அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அமரன் படத்தின் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் அவர் கூறினார்.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 44 படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, டாக்டர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆகியோருடனும் இணையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா கூட்டணியில் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான் இணையவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானுக்கு பதிலாக நிவின் பாலியும் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.
முன்னதாக சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் வெளியானது ‘சூரரை போற்று’ திரைப்படம். இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பும் சுதா கொங்கராவின் ஸ்கிரிப்ட் போன்றவை படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது மட்டுமில்லாமல், தேசிய விருதுகளையும் அள்ளிக் கொடுத்தது.
இந்நிலையில், அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமரன் படத்திற்கு விருதுகள் காத்திருக்கிறது என்ற கணிப்புபோல, புறநானூறு படமும் களத்தில் இறங்கியுள்ளது. புறநானூறு என்றாலே வீரத்தை பேசும் இலக்கியம் தான். பார்க்கலாம் எப்டின்னு.!