நந்தினியை மிரட்டிய அர்ச்சனா, சூர்யா செய்த சம்பவம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தியால் லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யா ரூமில் இருக்கும் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார். எப்ப பாத்தாலும் வேலை செஞ்சுகிட்டு இருக்கியா வேலை செய்யாத வேலைக்கு ஆள் பத்தலைன்னா இன்னும் சேர்த்துக்கலாம் என்று சொல்ல அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க உங்க வேலைய பாருங்க எங்களுக்கு சொல்லுகிறார். கண்ணாடியை பார்த்து நின்று கொண்டு அர்ச்சனா பேசியதெல்லாம் நினைத்து சிரிக்கிறார். சரி அதெல்லாம் விடு உங்கப்பா கல்யாணத்துக்காக மோதிரம் எடுத்தார் இல்ல எப்படி கரெக்டா இருக்கு என்று சொல்லுகிறார். அளவெடுத்து செஞ்ச மாதிரியே இருக்கே என்று சொல்ல ஆமா அளவெடுத்து செஞ்சதுதான். என்ன சொல்ற என்று கேட்க உங்க கல்யாணத்துக்கு நாங்க ஏதாவது செய்யணும்னு யோசிச்சோம் அதனால நூல் ஜோசியம் சொல்லி எடுத்த அளவு இதுக்காகத்தான் என்று சொல்லுகிறார்.
சூர்யா எனக்கென்று செஞ்ச மோதிரம் எனக்கு வந்துருச்சு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். பிறகு துணி எல்லாம் மடித்து விட்டு எனக்கு கிச்சனில் வேலை இருக்கு என்று சென்று விடுகிறார் நந்தினி. சூர்யா குடித்துக்கொண்டிருக்க அருணாச்சலம் ரூமுக்கு வருகிறார். சாப்பிடலையா என்று கேட்க நான் வெளியே சாப்பிட்டேன் டாடி என்று சொல்லுகிறார். நாளைக்கு உனக்கு எதுவும் வேலை இல்லனா ஒரு பூமி பூஜைக்கு போயிட்டு வரணும் என்று சொல்லுகிறார். மாதவியும் சுரேகாவும் கிளம்பி உட்கார்ந்து கொண்டிருக்க அசோகனை வைத்து கொஞ்ச நேரம் கிண்டல் செய்கின்றனர். அருணாச்சலம் ரெடி ஆகி வந்தவுடன் சூர்யா வந்தாச்சா என்று கேட்கிறார். இல்லை என்று சொன்னவுடன் சூர்யா ரூமுக்கு செல்லுகிறார். பிறகு நந்தினி அங்கு வர சுரேகா நந்தினி கூட்டிட்டு நேத்து பண்ண பாயாசத்தை பண்ண சொல்லி சொல்லுகிறார்.
ஆனால் பாசிப்பருப்பு காலி ஆயிடுச்சு என்று சொல்ல அப்போ துவரம் பருப்புல பண்ணு என்று சொன்ன நந்தினி சிரிக்கிறார் எதுக்கு சிரிக்கிற என்று கேட்க துவரம் பருப்புல பண்ண முடியாது பாசிப்பருப்புல தான் பண்ண முடியும் என்று சொல்ல அப்போ புஷ்பாவ அனுப்பி வாங்கிட்டு வர சொல்லுகிறார். சூர்யா ரூமுக்கு வந்த அருணாச்சலம் பார்க்க அவர் காதில் ஹெட்செட் போட்டு குடித்துக்கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். உடனே அருணாச்சலம் பூமி பூஜை ஃபங்சனுக்கு போகணும்னு சொன்னேனே ரெடி ஆகலையா என்று கேட்ட நான் எதுக்காக நீங்களே போயிட்டு வாங்க. நைட் எத்தனை வாட்டி சொன்ன வரணும் என்று சொல்ல சரி இப்பவே வந்துடறேன் நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அம்மா எங்க என்று மாதவியிடம் கேட்ட நாங்க கூப்பிட்டோம் அவங்க வரலைன்னு சொல்லிட்டாங்க என்று சொன்ன அருணாச்சலம் சுந்தரவல்லி பார்த்து எதுக்கு வரல என்று கேட்கிறார்.
அங்க போய் நான் அசிங்கப்பட தயாரா இல்லை அதனால நான் வரல நீங்க போங்க என்று சொல்ல, எவ்வளவு நாளைக்கு வீட்டிலேயே இருப்ப என்று சொல்லி அருணாச்சலம் கேட்க, எனக்கு அசிங்கமா இருக்கு என்னோட ஸ்டேட்டஸ் என்ன நான் எப்படி வெளியே தலை காட்ட முடியும் என்று சொல்லுகிறார். ஒரு வழியாக சுந்தரவள்ளியை அருணாச்சலம் சமாதானப்படுத்தி கூட்டி வருகிறார். பூமி பூஜை போடும் இடத்திற்கு சுந்தரவல்லி குடும்பத்துடம் வர அவர்கள் வந்து வரவேற்கின்றனர். அந்த நேரம் பார்த்து மினிஸ்டர் குடும்பத்துடன் அங்கு வருகிறார். சுந்தரவல்லி அவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார்.
இந்த குடும்பம் இருக்கிற இடத்துக்கு நம்ம எதுக்கு கூப்பிடுறாங்க நம்ம போகலாம் என்று சொல்ல ,வந்த உடனே கிளம்புனா தான் அசிங்கமா நினைப்பாங்க வா என்று கூடிச் சென்று நிற்கிறார். உடனே அங்கு இருப்பவர்கள் உங்க பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டோம் உங்க மருமகளை கூட்டிட்டு வந்தா தானே எங்களுக்கு தெரியும் என்று சொல்ல உடனே மினிஸ்டர் மனைவி அது எப்படி கூட்டிட்டு வருவாங்க இங்கே ஏதாவது கூட்டி பெருக்கற வேலை இருந்தா சொல்லுங்க அதுக்குவேனா கூட்டிட்டு வருவாங்க என்று சொல்கிறார். உடனே அங்கு இருப்பவர்கள் என்ன சொல்றீங்க என்று கேட்க, அவங்க பையன் வீட்டு வேலைக்காரிய தானே கல்யாணம் பண்ணி இருக்கான். வீட்டு வேலைக்காரி தான் மருமகன் சொல்றதுக்கு கூச்சப்பட்டுக்கிட்டு எங்கேயும் கூட்டிட்டு வர்றது இல்ல என்று சொல்லி சுந்தரவளியை அசிங்கப்படுத்துகிறார்.
உடனே அங்கிருப்பவர்கள் சுந்தரவல்லி மேடம் எவ்வளவு பெரியவங்க,அவங்களாவது வீட்டு வேலைக்காரிய மருமகளாக்குறதாவது நீங்க வேற ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காதிங்க என்று சொல்ல, உடனே மினிஸ்டர் மனைவி அப்படியாவது நடந்திருந்தால் நம்ம நாண்டுக்கிட்டு செத்து இருப்போம், இல்ல வீட்டுக்குள்ளே அடைந்திருப்போம் இப்படி வந்து நிற்க மாட்டோம் சூடு சொரணை கொஞ்சம் கூட இல்ல என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். அர்ச்சனா நான் வந்த கிளம்புறேன் டாடி உங்க மூஞ்ச பாக்கவே கொலவெறி ஆகுது என்று சொல்ல அவங்களே நிக்கும் போது உனக்கு என்னடா என்று சொல்லி நிற்க வைக்கிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா நந்தினி உடன் காரில் வந்து இறங்குகிறார். சூர்யா நந்தினி கையை பிடித்து கூட்டிக் கொண்டு வர அர்ச்சனா அவரது கையை பிடித்து கூட்டி வருவது போல பார்க்கிறார். அங்கு அர்ச்சனா குடும்பத்தை பார்த்தவுடன் நந்தினிக்கு அவர் போட்டிருந்த கூலிங் கிளாஸ் போட்டுவிட்டு அனைத்து கொள்கிறார். நந்தினியை பார்த்து அர்ச்சனா முறைக்க இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் நான் போட்ட மூன்று முடிச்சுனால வீட்டுக்குள்ளேயும் வெளியிலயும் நந்தினிக்கு அவமானத்தை தேடி தருது. ஒழுங்கு மரியாதையா சொல்ற என் கண்ணு முன்னாடி நிக்காத என்று நந்தினி அர்ச்சனா அறையப்போக சூர்யா தடுக்கிறார்.
நான் இருக்கிற வரைக்கும் என் நந்தினிக்கு எல்லாம் மரியாதையும் கிடைக்கணும். அதை யாரும் தடுக்க முடியாது என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.