வரலாற்றுக் கதையில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..

Web Ads

டோலிவுட்டில், நடிகர் பாலகிருஷ்ணா ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன் பிறந்த நாளை முன்னஅறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது படக்குழு. ‘பெத்தி’ படத்தை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ஸ்ரீராம ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, இப்படத்திலும் பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடி இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கமர்ஷியல் கதைகளை இயக்கி வெற்றி பெற்ற கோபிசந்த் மாலினேனி இப்படம் மூலம் வரலாற்று பின்னணிகொண்ட கதையை இயக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

nayanthara signs as heroine for balakrishna
nayanthara signs as heroine for balakrishna