அன்புக் கணவர் விக்னேஷ் சிவன் பற்றி, காதலாகி கசிந்து நயன்தாரா பேச்சு..
விக்கி குறித்து, காதலாகி கசிந்து நயன் பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இவை யாவும் பார்ப்போம்..
நடிகை நயன்தாரா ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், சமீபமாக இருவருமே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இச்சூழலில், விக்னேஷ் சிவன் குறித்து நயன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
‘நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என நான் அவ்வப்போது நினைத்ததுண்டு. இப்போதும் நான் குற்ற உணர்ச்சியில்தான் இருக்கிறேன்.
ஏனெனில், அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென்று தனியாக ஒரு பெயர் இருந்திருக்கும்.
இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் அவருக்கென ஒரு அடையாளம் இருந்திருக்கும். விக்னேஷ் சிவன் ரொம்பவே நல்ல மனிதர். அவரைப் போல் ஒருவர் இருக்க முடியுமா? என்று என்னிடம் கேட்டால் அது எனக்கு தெரியவில்லை. ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ் விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது.
தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆடம்பரத்தையோ, வெற்றியையோ நினைத்து நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே இல்லை’ என்றார்.
இதற்கு நெட்டிசன்ஸ், ‘நயனின் காதல் டயலாக்ஸ் செம, என்னா ஃபீல், எல்லாமே முதிர்ந்த அனுபவங்களால் வந்தது’ என்ற கமெண்ட்ஸ் வைரலாகி தெறிக்கிறது.