கேரள பெண்களின் கற்பனையில் விஜய் சேதுபதி உள்ளார்: மஞ்சு வாரியர் பேச்சு
மஞ்சு வாரியர் பேச்சை கேட்டு, விஜய் சேதுபதி லிட்டர் கணக்கில் வெட்கம் வழிந்தார். அது எப்டின்னு பார்க்கலாம் வாங்க..
திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை’ படத்தில் வாத்தியார் கேரக்டரில் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 படத்தில் அவரது கேரக்டர்தான் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவரது இளவயது கெட்டப் மறறும் மஞ்சு வாரியருடனான ரொமான்ஸ் போன்றவை டிரெய்லர் மற்றும் பாடல்களில் வெளியாகியுள்ளது. மேலும், இளையராஜாவின் இசைமெட்டும் தனியான கவனத்தை இந்த காதல் பெற்றுள்ளது.
இப்படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ‘விஜய் சேதுபதிக்கு கேரளாவில் கிரேஸ்’ என மஞ்சு வாரியர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
‘எனக்கு தொடர்ச்சியாக போராட்டத்தையொட்டிய கேரக்டர்களே நடிக்க கிடைத்தது. ரொமாண்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது. அது விடுதலை 2 படத்தின்மூலம் தற்போது நிறைவேறி உள்ளது.
கேரள பெண்களிடம் அவர்களுக்கு பிடித்த ரொமாண்டிக் ஹீரோ குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஜய் சேதுபதி தான் லீடிங்கில் இருக்கிறார். கமெண்டிலும் விஜய் சேதுபதியின் பெயரே அதிகமாக வருகிறது.
பெண்களின் கற்பனையில் உள்ள மனிதராக விஜய் சேதுபதி உள்ளார்’ என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
அவர் இதைக் கூற, பக்கத்தில் இருந்த விஜய் சேதுபதி தனக்கு வெட்கம் வருவதாக கூறுவதாக வீடியோவில் காணப்பட்டது. தொடர்ந்து ‘தன்னை க்ளோசப்பில் வைக்க வேண்டாம்’ என கேமரா மேனிடம் கூறுவதாகவும் காணப்படுகிறது.
ப்பா.. என்னா வெட்கம்..! மஞ்சு நெஞ்சிலும் ப்ளாட் போட்டு விட்டார் விஜய் சேதுபதி.