சமுத்திரக்கனி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிக்பாஸ் தீபக் மற்றும் முத்துக்குமரன்..!
சமுத்திரகனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக்பாஸ் முத்துக்குமரன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.
டைட்டில் வின்னராக முத்துக்குமரனும்,ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் போட்டியாளர்கள் நட்பு ரீதியாக அனைவரிடமும் பழகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக முத்துக்குமரன் மற்றும் தீபக் இருவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர்கள் இருவரும் நடிகர் சமுத்திரக்கனியுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை முத்துக்குமரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram