என் அண்ணன் கார்த்திக்; என் தம்பி விஷால்: இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி..
‘கார்த்திக் என் அண்ணன் என்றால், விஷால் எனக்கு தம்பி ஆவார்’ என சுந்தர்.சி நெகிழ்ந்த நிகழ்வு பார்ப்போம்..
இயக்குனர் சுந்தர்.சி யும் விஷாலும் முதன்ம முதலில் இணைந்து பணியாற்றிய ‘மத கஜ ராஜா’ படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் 12-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரமோஷனில் சுந்தர்.சி பேசும்போது,
‘விஷால், குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருமுறை சுந்தர் சி-யிடம் கதை கேட்டிருக்கிறார். சுந்தர் சி.யும் கதையை சொல்ல விஷாலின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். ஆனால், இவர் வருவதற்கு முன் விஷால் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். இதனால், ஏமாற்றம் அடைந்த சுந்தர் சி, மிகவும் அப்செட் ஆனார்.
கோபத்தில் வீட்டுக்கு வந்து, குஷ்புவிடம் நடந்ததை கூறி இருக்கிறார் சுந்தர் சி. அப்போது, குஷ்பு விஷாலுக்கு ஆதரவாகப் பேசி, தான் போன் போட்டு தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு ‘வேண்டாம்’ என சொன்ன சுந்தர் சி, ‘இனிமே விஷாலை தன் வாழ்க்கையில் திரும்ப பார்க்கவே கூடாது, அவருடன் படம் பண்ணவே கூடாது’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.
பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சுந்தர்.சி கலந்துகொள்ள; அங்கு விஷாலும் வந்திருக்கிறார்.
அப்போது, விஷாலை பார்க்கக்கூடாது என முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்த சுந்தர்.சி யிடம், நேராக வந்து கையை பிடித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் விஷால்.
அதன் பின்னர்தான், அன்று கதை சொல்ல சென்றபோது, குடும்பத்தினர் ஒருவர் மருத்துவமனையில் இருந்ததால், விஷால் அவசர அவசரமாக சென்றது தெரிய வந்தது.
நான் நிறைய ஹீரோக்களுடன் பணியா
ற்றி இருக்கிறேன். அதில் கார்த்திக்கை என் அண்ணனாக ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் விஷாலை தான் என் தம்பியாக ஏற்றுக்கொண்டேன்’ என சுந்தர்.சி கூற, அவரின் பேச்சை கேட்டு விஷால் கண்கலங்கி விட்டார்.
இந்த சிச்சுவேஷன்ல ஒரு ஸாங் கேட்குதா “நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை..”