தளபதி விஜய்யின் கடைசிப்படம் ஓடிடி.யில் விலை போகுமா? வெயிட்டிங்..
வீட்டுக்கொரு மரம் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, ஓடிடி.தளம் வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. இது குறித்த விவரம் வருமாறு:
தியேட்டர்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் போல ஓடிடி.யில் வெளியாகும் படங்களுக்கும் ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி. விலைபோக விரும்புகின்றன.
பொதுவாக, குடும்ப பட்ஜெட் காரணமாகவும், சில ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும்போது குடும்பத்தோடு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால், 4,5 ஓடிடி தளங்கள் மட்டுமே இருந்த நிலை தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட புதிய ஓடிடி தளங்கள் உருவாகியுள்ளன. ஓடிடியில் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட, மிக குறைவான தொகை கொடுத்தே வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆதலால், நடிகர் தனுஷின் நான்கு படங்களும் ஓடிடியில் விலை போகாமல் உள்ளது. அதேபோல் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பரோஸ்’ படம் சுமார் 40 கோடிக்கு பேசி, 20 கோடிக்கு மட்டுமே விலை போயுள்ளது.
இந்நிலையில், தளபதி விஜய் நடித்த திரைப்படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனாலும், அவருடைய 69-வது திரைப்படம் இன்னும் வியாபாரமாகாமல் உள்ளது.
மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் செம ஹிட்டான ‘அமரன்’ படமும் முதலில் வியாபாரம் ஆகாமல் இருந்து, பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது நினைவுகூரத்தக்கது.
படக்குழு எதிர்பார்க்கக் கூடிய தொகை கிடைக்காத காரணத்தால்தான், பல படங்கள் ஓடிடி-யில் வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.