நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்
‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார்.
‘தக் லைப்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற ரோலில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் நல்லவரா ? இல்லை கெட்டவரா ? என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கமல், ‘இப்போவே இந்த பதிலை சொல்லிவிட்டால், மணிரத்னம் கோபப்படுவார். படம் பார்த்ததற்கு அப்புறம் தான் உங்களுக்கு தெரியவரும். ஆனால், படம் பார்த்தாலும் இந்த கதாபாத்திரம் நல்லவரா ? கெட்டவரா ? என்ற பதில் உங்களுக்கு தெரியாது. நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தான் இந்த கதாபாத்திரம்’ என்றார்.
இதன் மூலம் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் நெகட்டிவ் ஷேடில் இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பார்க்கலாம்..!