சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றிய விவரம் காண்போம்..

‘டிராகன்’ திரைப்படம் வெளிவாகி வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிக்கையில்,

‘டிராகன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும்.
‘எஸ்.டி.ஆர்-51’ படத்தை முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும்.

எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. நம்பிக்கை என்பதில் தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

சிம்பு ‘டிராகன்’ படம் பார்த்துவிட்டு, அடுத்த படத்தின் வாய்ப்பை தரவில்லை. அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதத்தை வைத்துக் கொடுத்தார்கள். சொன்ன நேரம், பொருட்செலவு எல்லாமே அதற்கு காரணம். ‘எஸ்.டி.ஆர்-51′ உருவானது அப்படிதான்’ என தெரிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து நீங்கள் இயக்கவிருக்கும் படம், ஆக்‌ஷனா? லவ்வா? என கேட்டபோது, சிரித்துக்கொண்டே ‘லவ் ஆக்‌ஷனா அவதாரம் எடுக்கும்’ என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அதன்பிறகு, தொடங்கும் படம் ‘டிராகன்-2’ என எடுத்துக் கொள்ளலாமா? என்றதற்கு, ‘புதிய கதையுடன் வருகிறோம்’ என்றார்.