மீண்டும் மீண்டும் ரேஸ் விபத்தில் சிக்கும் அஜித்.ஆனால்? சுரேஷ் சந்திரா போட்ட பதிவு..!

Web Ads

கார் ரேஸில் அஜித்திற்கு மீண்டும் விபத்து ஏற்பட்டு உள்ளது.

suresh chandra tweet about ajith car race

suresh chandra tweet about ajith car race

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.இந்த படத்தில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

படம் ஒரு பக்கம் இருக்க மறுபுறம் அஜித் கார் ரேஸில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்கு முன் ஏற்கனவே அவருக்கு கார் ரேஸ் என்பது விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போதும் நடந்த கார் ரேஸில் அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது அது குறித்து சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் 5வது சுற்று பந்தயங்கள் நடக்கும் வலென்சியா ஸ்பெயின் அஜித் குமாருக்கு நன்றாக இருந்தது. அவர் ஒவ்வொருவரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்று 14வது இடத்தைப் பிடித்தார்.

சுற்று 6 துரதிர்ஷ்டவசமானது.மற்ற கார்கள் காரணமாக 2 முறை விபத்துக்குள்ளானது. அவர் தவறு செய்யவில்லை என்பதை இணைப்பு வீடியோ தெளிவாகக் காட்டுகிறது.முதன்முறையாக விபத்தில் சிக்கிய அவர் மீண்டும் குழிக்குள் வந்து நன்றாக இருந்தார். இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டு இரண்டு முறை கவிழ்ந்தார். அவரது விடாமுயற்சி வலுவாக உள்ளது மற்றும் அவர் பந்தயத்தைத் தொடர மீண்டும் காயமின்றி வெளியே வருகிறார்.
அக்கறை மற்றும் வாழ்த்துகளின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ஏகே பரவாயில்லை.

இவர் கூறிய இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.