Web Ad 2

புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘மாயபிம்பம்’ படம்: சுந்தர்.சி போஸ்டர் வெளியீடு..

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி தற்போது வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். சிறுபட்ஜெட் படங்களும் சில நேரங்களில் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

director sundar c released mayabimbam movie poster
director sundar c released mayabimbam movie poster