Web Ads

தலைவர் 173 படத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்..சுந்தர்.சி அறிக்கை..!

Web Ad 2

தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்க இருந்த சுந்தர் சி அறிக்கையின் மூலம் அதிர்ச்சியான முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

அதாவது கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தலைவர் 173 என்ற மதிப்பு மிக்க திட்டத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படும் அவை எனக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்றுக் கொடுத்தனர் இந்த செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தால் தயவு செய்து எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சுந்தர் சி என இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்போது சுந்தர் சி யின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

director sundar.c official annoucement of thalaivar 173 movie
director sundar.c official annoucement of thalaivar 173 movie