ஹிட் கொடுத்த டிமான்டி காலனி 2, இயக்குனர் எடுத்த முடிவு..!
டிமான்டி காலனி 2 படம் ஹிட் கொடுத்துள்ளதால் இயக்குனர் முடிவு எடுத்துள்ளார்.
அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்று டிமான்டி காலனி 2. இந்த திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்ததன் காரணமாக ஒன்பது வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.