Pushpa 2

‘தல’ அஜித் நடிக்கும் விடாமுயற்சி; குட் பேட் அக்லீ படங்களின் அப்டேட்ஸ்..

அஜித் நடிப்பில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களின் அப்டேட்ஸ் குறித்து பார்ப்போம்..

‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் கடந்த வாரம் தாய்லாந்தில் மீதமான பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. இது குறித்த சில புகைப்படங்களும் வைரலாகின.

இப்படம், 1997-ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜோனாதன் மாஸ்க்டோவ் இயக்கிய ‘பிரேக் டவுன்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ளது. அதாவது, ஒரே இரவில் நடக்கும் கிரைம் திரில்லர் மூவியாகும்.

படத்தி்ல் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில், அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ரெஜினா கசண்டா, ரம்யா சுப்ரமணியன், உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில், சமீபத்தில் வெளியான படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சவுடீக்கா..’ வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள அஜித் ‘குட் பேட் அக்லீ’ படத்தின் அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்கையில் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் டப்பிங் பணிகளை அஜித் மேற்கொள்ளும் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

actor ajith in vidaamuyarchi and good bad ugly movies updates
actor ajith in vidaamuyarchi and good bad ugly movies updates