ஒரு மனநோயாளிதான் இப்படி எல்லாம் பேசுவார்: பாடகி சுசித்ரா பற்றி பயில்வான்..
ஜோதிகாவை பற்றி மிக இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட பாடகி சுசித்ராவை, பயில்வான் ரங்கநாதன் விளாசியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
கங்குவா படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனம் குறித்து ஜோதிகா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையா எழுதுகிறேன். முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது. மொத்த 3 மணி நேரமும் அப்படி இல்லை. கேமரா வேலைப்பாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருக்கிறது’ என கூறியிருந்தார்.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன், சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவிலும், ஜோதிகா கலந்து கொள்ளவில்லை. கங்குவா பட புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இப்படி எதிலும் கலந்து கொள்ளாத ஜோதிகா. திடீரென்று கங்குவா படம் நல்லா இருக்கு, அந்த படத்தை சில விஷமிகள் தான் விமர்சனம் செய்றாங்க, அப்படின்னு சொல்லி இருக்காங்களே.. அதுல எந்த வகையில நியாயம் இருக்கிறது.
இவர் சொல்லுவது போல யாரும் படத்தை விமர்சனம் செய்யல, ஒரு சிலர் மட்டும்தான் கங்குவா படம் சரியில்லன்னு விமர்சனம் செய்தார்கள்.
மத்தவங்க எல்லாருமே படம் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க. ஆனால் ஜோதிகா மட்டும்தான் அந்த அறிக்கையில் அரை மணி நேரம் படம் நல்லா இல்ல, அப்படின்னு அவங்களே ஒரு ஸ்டேட்மெண்ட்ட கொடுத்து இருக்காங்க மற்றவர்கள் யாரும் சொல்லாத விஷயத்தை சொன்னதே ஜோதிகா தான்.
மாமனாரோடு சண்டை என்பதால் சென்னையில் நடந்த புரோமோஷனுக்கு வரவில்லை. ஆனால், மும்பையில் நடந்த புரோமோஷனில் கலந்து கொண்டிருக்கலாமே, உண்மையில் ஜோதிகாவிற்கு சூர்யாவின் மீது அக்கறை இருந்திருந்தால் நிச்சயம் அந்த புரமோஷனில் கலந்து கொண்டிருப்பார். இதில் இருந்து ஜோதிகாவிற்கு சூர்யா மீது அக்கறை இல்லை.
இது ஒரு பிரச்சனை இருக்க, சர்ச்சை நாயகி என பெயர் எடுத்த சுசித்ரா, இந்த விஷயத்தில் ஜோதிகாவை கண்டபடி திட்டி வருகிறார்.
எந்த வகையில் கங்குவாவிற்கும் சுசித்ராவிற்கும் தொடர்பு இருக்கிறது. ஏன் தேவையில்லாத வேலையை செய்கிறீர்கள். ஜோதிகா பெரிய நடிகை, மும்பையில் பல கோடி சொத்து, சென்னையில் பல கோடி சொத்து இருக்கும் ஜோதிகாவை பிச்சைக்காரி என்று சுசித்ரா சொல்லி இருக்கிறார்.
இதுகுறித்து ஜோதிகா வழக்கு தொடர்ந்தால், கஸ்தூரி போல சுசித்ராவும் ஜெயிலுக்கு போக வேண்டியதுதான். யாரின் பிரச்சினைக்கும் போகாமல், சூர்யாவின் குடும்பம் ரொம்ப அமைதியாக இருக்கிறார்கள்.
இவர்களின் குடும்பம் குறித்து பேசுவது, சுசித்ராவிற்கு தேவையில்லாத வேலை, ஒரு மனநோயாளிதான் இப்படி எல்லாம் பேசுவார். என்று பயில்வான் ரங்கநாதன் விளாசியுள்ளார்.
முன்னதாக, கங்குவா படம் குறித்த கருத்துகள் என்பது வேறு விஷயம். சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால், சுசித்ராவின் அருவருப்பான பேச்சுக்கு இணையவாசிகள் பதிலடி கொடுத்து வருவதும் தற்போது வைரலாகி வருகிறது.