நமீதாவை பற்றி நயன்தாரா தற்போது விமர்சிக்க காரணம் என்ன?: வைரலாகும் கேள்விகள்..
நமீதாவை பற்றி தற்போது நயன்தாரா கூறுவதன் காரணம் என்ன? என இணையவாசிகளின் கேள்விக்கணைகள் வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
அட்லீ இயக்கிய ஜவான் படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்தார்.
ஜவான் ஹிட்டுக்கு பிறகு அவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் டாக்சிக் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரது வாழ்க்கை பயணம், திருமண நிகழ்வு பற்றிய ஆவணப்படம் Nayanthara Beyond The Fairy Tale நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அதில் அவர் சந்தித்த பிரச்னைகள், அனுபவங்கள் என ஏராளமான விஷயங்களை பேசினார். இந்த ஆவணப்படத்தால் அவருக்கும் தனுஷுக்கும் முட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னை ‘பில்லா’ பட ஷூட்டிங்கில் நமீதா அசிங்கப்படுத்தியதாக நயன் கூறியுள்ளது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
நயன் கூறும்போது, ‘அஜித்துடன் நான் நடித்த பில்லா படத்தின்போது ஆரம்பத்தில் நமீதாவுக்கும் எனக்குமான உறவு நன்றாகவே இருந்தது. முதலில் நானாகவே சென்று அவரிடம் பேசினேன். இருவரும் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். முதல் சில நாட்கள் அப்படித்தான் சுமூகமாக போகும் என்றும் எனக்கு தெரியும்.
திடீரென ஒருநாள் நமீதா என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அவருக்கும் எனக்கும் பெரிதாக எந்தப் பிரச்னையோ, சண்டையோகூட நடக்கவில்லை.
ஸ்பாட்டுக்கு அவர் வந்தால் அனைவரிடமும் ஹாய் சொல்வார். எனக்கு மட்டும் சொல்லமாட்டார். ஒருகட்டத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. அதனையடுத்து நானும் அப்படியே விட்டுவிட்டேன். அவருடன் பேசுவதையும் நிறுத்திவிட்டேன். மற்றவர்களுக்கு நம்முடன் பிரச்னை இருக்கும் பட்சத்தில் அது அவர்களின் பிரச்னையாக மாறிவிடுகிறது” என்றார்.
இது குறித்து நெட்டிசன்கள் விவரிக்கையில், அன்று பில்லா படத்தில் நடந்த பிரச்சினையை, தற்போது சொல்வதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கும்? தனுஷை மறைமுகமாக தாக்குகிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.